உடல் இளைக்க ரொம்ப சிம்பிளான ஒரு சூப்

உடல் பருமன். இதுதான் இன்று பலருடைய கவலை. பலர் தினமும் நடக்கிறார்கள், ஓடுகிறார்கள், நீச்சலுக்குப் போகிறார்கள். டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். இல்லையென்றால் “டயட்டிங்’ என்ற பெயரில் பட்டினி கிடக்கிறார்கள்.
இன்னும் சிலர் சில ஸ்லிம்மிங் சென்டர்களுக்குப் போய்
ஆயிரக்கணக் கான ரூபாய் செலவழிக்கிறார்கள்.
விலை அதிகம் கொண்ட மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். கடைசியில் “பர்ஸ் இளைத்ததே தவிர உடம்பு இளைக்கவில்லையே’ என்று
ஆதங்கப்படுகிறார்கள்.
உடல் இளைக்க ரொம்ப சிம்பிளான ஒரு சூப்..
தினமும் காலை சுமார் பதினோரு மணியளவில் மிளகு ரசம் ஒரு டம்ளர் பருகுங்கள். அது போதும். எத்தனை நாள் சாப்பிட வேண்டும் என்று கேட்காதீர்கள்! தினமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். இந்த ரசத்துக்கு மணம்,
குணம் ஊட்ட கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த மிளகு ரசத்தில் பருப்பைத் தவிர்ப்பது நல்லது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதத்திற்கு இரண்டு, மூன்று கிலோ வரை உடல் குறையும்.
##வெறும் ரசம் தானே! இதனால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது.. உடல் இளைக்க நினைப்பவர்கள் குடித்துத்தான் பாருங்களேன்...##
பகிர்ந்தவர்: உதய் குமார்
No comments:
Post a Comment