Friday, 6 April 2012

ஈஸ்டர் தீவுகள்



ஈஸ்டர் தீவு ஒரு தனித்தீவு. அருகில் நிலப்பரப்பு கிழக்கில் தென் அமெரிக்கா, மேற்கில் பொலினீசிய தீவுகள் ஆனால் இரண்டும் இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில். பெரும் நிலப்பரப்பான தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்ககூடும் என்று நம்பப்பட்டு வந்ததை மாற்றியவர் எரிக்கா. ஒவ்வொரு இனத்துக்கும் மரபியல் நியதி (genetic code) வேறுபடும். அதன்படி ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ ஜெனடிக் கோட்டுடன் ஒத்துப்போனது பொலினேசிய கோட். அந்த நாளில் சாதாரண படகுகள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது, உலகின் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சி இதுவாகும்.

இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், வேளாண்மை, மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின.

பிரமாண்டமான கற்சிலைகள், எப்படி ஒரு கற்கால மனிதர்களால் இதை செய்யமுடிந்தது? எப்படி அவர்கள் இதை தீவைச் சுற்றி நகர்த்தினார்கள் என்பது முதல் ஆச்சரியம். அடுத்தது ரானோ ரரக்கூ (Rano Raraku), இந்த மொவய்கள் (கற்சிலைகள்) செதுக்கப்பட்ட கற்சுரங்கம் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன. எடை 80 டன்னிலிருந்து 250 டன் வரை. பத்து மைல் தூரம் வரை தீவைச்சுற்றி நகர்த்தியிருக்கிறார்கள்.

'மூதாதையர்களின் வாழும் முகங்கள்' இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது. இந்த மொவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).

எது இந்த தீவுவாசிகளை இந்த நாள் வரை பேசவைத்ததோ, அதுவே ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு சவக்குழியும் தோண்டியது. ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன, ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது, மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். நாகரீகம் பின்னோக்கி சுழலத்துவங்கியது "நரமாமிசகாலம்" தொடங்கியது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்தார்கள். கூடவே மொவய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள். மக்கள் தொகை பெருமளவு குறைந்தது.

எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். கூடவே தீவுவாசிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள், சிலை செய்ய அல்ல அடிமைகளாக. ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப்பின் தப்பி வந்தார்கள், வந்தவர்கள் கொண்டுவந்தது சின்னம்மை. இது போன்ற வியாதிகளை அறிந்திராத தீவுவாசிகள் வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தை அது எழுதியது. ஒரு கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது.

ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள். சிலை செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள். குறைந்த அளவுடைய மற்றும் பதிலியில்லாத வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சகமனிதனின் வன்மம், தப்பிபிழைத்தவர்களையும் அழித்தது.


Wednesday, 4 April 2012

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்





ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனி
யாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.
அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது.
ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.







நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்





மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

  • பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்
  • வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
  • பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
  • காகிதம் - 2-5 மாதங்கள்
  • கயிறு - 3-14 மாதங்கள்
  • ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
  • உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
  • டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
  • தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
  • நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
  • தகர கேன் - 50-100 ஆண்டுகள்
  • அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
  • பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
  • டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்
  • பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன. -Gobi Nath Post in மரம் ( Tree ) GROUP

Tuesday, 3 April 2012

சிறுநீரககல் பிரச்சினை- எளிமையான தீர்வு


(எனக்கு வந்த மின்னஞ்சல் )
சிறுநீரககல் பிரச்சினை


படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.

அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்க

 
பகிர்ந்தவர்:  இனியவன் தமிழன்

Monday, 2 April 2012

உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா?

 

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்?

‘‘கரு உருவான 20வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழு வதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடித்தள வேலைகள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது.

இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்’’ என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்ரியா.

‘‘குழந்தை புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது, முதல் ஒரு மாத காலத்தில் கிடைக்கிற ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் அமைகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய், தைராய்டு சுரப்பியில் உண்டாகிற ஏற்ற இறக்கம், சரியான ஊட்டச்சத்து இல்லாமை... இவை எல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தடை செய்யக்கூடியவை.
 

‘ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15&வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய 15&வது வயதில் மீண்டும் அதே தடுப்பு ஊசி போட வேண்டும். 

இது அந்தக் குழந்தையின் உடலில் ருபெல்லாவை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொடுக்கும். பின்னாளில் அவள் பெரியவளாகி கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவின் மூளை வளர்ச்சி நல்லபடியாக இருப்பதற்குத்தான் இத்தனை முன்னேற்பாடு!

இந்தியாவில் இன்னும் இந்த ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்படிப் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தடுப்பூசி இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது.
 
ருபெல்லா வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தையின் தலை சின்னதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கண் பார்வை குறையலாம். மூளை நரம்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்புச் செயல்பாடு குறைவாக இருக்கும்.

இருபது நாள் கருவில் வளர ஆரம்பிக்கும் மூளை, ஏழு வயது ஆகும்போது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்குக் காரணம், அதில் இருக்கும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள், மூளை வேகமாக இயங்கத் தூண்டுதலாக இருக்கும் என்ப தால்தான்.

இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருப்பதோடு, மூளையின் கிரகிக்கும் திறனும் அதிகமாக இருக்கும் என்று ஹங்கேரியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்ரியா.
 
பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆணோ, பெண்ணோ... அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!


என்றும் இளமையாக இருக்க....

 
திராட்சையில் உள்ள கூட்டுப் பொருள்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் கதிர்வீச்சில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக உள்ளது.

பார்சிலோனா பல்கலைகழகம் மற்றும் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கொவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பை தவிர்க்க திராட்சையில் உள் ப்ளேவனாய்ட் உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 ஆய்வின் இயக்குனரும் பார்சிலோனா பல்கலைகழக உயிரி வேதியியல் நிபுணருமான மார்டா காஸ்கன்டே கூறுகையில்,”சூரிய ஒளியின் மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என இந்த புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.
அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றில் திராட்சை கூட்டுப் பொருள்கள் ஏற்கனவே உள்ளன. இருப்பினும் அவை தோல் செல்களை பாதுகாப்பதில் உரிய முறையில் செயல்படவில்லை. சூரிய கதிர்வீச்சால் தோலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்ப்பதற்கு தற்போதைய ஆய்வு உதவும் என அவர் தெரிவித்தார்.

மெலிந்த உடல் குண்டாக


இந்தியாவே மூலிகைகள் நிறைந்த தேசம்தான். நம்நாட்டில் கிடைக்கும் மூலிகைகளே நமது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளன. காடு, மலைகளில்தான் மூலிகைகள் வளரும் என்பதில்லை. சாலையோரங்களிலும்,வயல்வரப்புகளிலும் கூட மூலிகைகள் தானாக வளர்ந்து நிற்கின்றன. வேலிகளில் படர்ந்து வளரும் பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும்.


இதில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்


இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.


மருத்துவ மூலிகை

இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.


மெலிந்த உடல் குண்டாக

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.


வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.


பிரண்டை துவையல்

எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.


இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.


மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.


மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.


ரத்த ஓட்டம் சீராகும்

உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.


பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.


எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

நன்றி : நாகூர்கனி காதர்