கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுகு புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது.கணினி தொடர்பான பணி எனப் பல இதன் அடிப்படை காரணம்.
இவை தவிர, புரோகிராமிங்
செயல்பாடு தரும் சவாலும்
ஒரு காரணம். பலர்
இதில் மனநிறைவு பெறுவதற்காகவே,
புரோ கிராமிங் பாடங்களைக்
கற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்காக, இணையத்தில்
ஓர் இல...வச
தளம் இயங்குகிறது. இதன் பெயர் கோட் அகடமி(Code
Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங் (coding)எனக்
கூறுவார்கள். எனவே அந்தப்
பெயரிலேயே இந்த தளம்
அமைக்கப்பட்டுள்ளது.
இதன் இணைய தள முகவரிwww.codeacademy.com
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம், அப்படியேகொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது. அதன் பின்னரே, நம்மை தளத்தில் பதியச் சொல்லி கேட்கிறது. இது இலவசம்.
ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன.
பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன. புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது.
பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினைத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.
நன்றி: உதயகுமார்
No comments:
Post a Comment