Sunday, 1 April 2012

மறதியை போக்க சில வழிகள்




நமது மூளையின் வளர்ச்சி குழந்தைப் பருவத்திலேயே நிறைவடைந்து விடுகிறது.

போதாக் குறைக்கு வயது போகப் போக மூளையின் கலங்கள் படிப்படியாக செயலிழந்து போகின்றன. எனவே வயதாகிக் கொண்டு செல்லும்போது ஞாபக சக்தியை சிறிது இழப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆனால் எல்லா மறதிகளும் அவ்வாறு தவிர்க்க முடியாதவை அல்ல. நமது அக்கறையின்மையாலும், முயற்சிக் குறைவாலும் தான் பல செயல்கள்  நமது நினைவை விட்டு நீங்கிவிடுகின்றன.  


சில உத்திகள் 

ஹார்வட் மருத்துவக் கல்லூரியினர் உங்கள் ஞாபக சக்திக்கு ஊக்கம் கொடுத்து, மறதியை தவிர்ப்பதற்கான சில உத்திகளை சொல்லியிருக்கிறார்கள். அவை கீழ்வருவன

# வாழ்க்கையை ஒழுங்கான முறையில் கொண்டு செல்லுங்கள்.

# காலண்டர்களை உபயோகியுங்கள். செய்ய வேண்டிய காரியங்களுக்கான லிஸ்ட்டுகளைப் பேணுங்கள். அட்ரஸ், டெலிபோன் நம்பர் போன்றவற்றை குறித்து வையுங்கள். இன்றைய காலத்தில் நல்ல ஒரு கைப்பேசி இவைகளை உங்களுக்காக பேண உதவும்.

# நான் மறதிக்காரன். என்னால் எதனையும் நினைவில் வைத்திருக்க முடியவில்லை' என அவநம்பிக்கை அடைவது கூடாது. என்னால் நினைவு வைத்திருக்க முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்.  திடமான மனதுடன் அதற்கான முயற்சிகளைமேற்கொள்ள வேண்டும்.

# புதிய செயல்களை எதிர் கொள்ளும் போது அவற்றை முழுமையாக ஒரே நேரத்தில் விளங்குவதும் ஞாபகப்படுத்துவதும் சிரமமாக இருக்கலாம். எனவே பகுதி பகுதியாக உங்களால் ஜீரணிக்கக் கூடிய அளவுகளில் புரிந்து கொள்ள முயலுங்கள்.

# புதிய செயல்களை கற்க நேர்கையில் கண், செவிப்புலன், மணம், சுவை, தொடுகை போன்ற எல்லாப் புலன்களையும் பயன்படுத்தி புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

# அதே போல குறித்து வைப்பதும், அதனைப் பற்றிய சித்திரம் அல்லது வரை படத்தை வரைவதும் புதிய செயல்களை நினைவில் நிறுத்த உதவும். இல்லையேல் வாய்விட்டு உரக்கச் சொல்வதும் மறக்க விடாது.

# செயல்களை மீள நினைவு கூருங்கள். ஆரம்பத்தில் அடிக்கடி, பின்பு சற்று நீண்ட இடைவெளிகளில். தொடர்ந்து இவ்வாறு செய்து வர மறதியை மறந்துவிடுவீர்கள்

நன்றி: டாக்டர்.எம்.கே.முருகானந்தன்

No comments:

Post a Comment