உலகிலேயே பணக்கார கிராமமாக சீனாவின் ஹுவாக்ஸி வளர்ந்து உள்ளது. இக்கிராமத்தின் மொத்த பரப்பளவு ஒரு சதுர கிலோமீட்டர் மட்டுமே. இதனை தற்போது மாதிரி சோசலிஷ கிராமமாக அழைக்கின்றனர். இந்த கிராமம் இவ்வளர்ச்சியை அடைய வித்திட்டவர் வு. ரென்பா என்பவர் ஆவார். இவரின் வழிகாட்டுதலாலும், மக்களின் கடின உழைப்பாலும் ஹுவாக்ஸி பணக்கார அந்தஸ்தை பெற்றுள்ளது. எழை விவசாய சமூகம் தான் இன்று பெரும் பணக்கார சமூகமாக வளர்ந்துள்ளது.
இக்கிராமத்தின் தெருக்களில் மகா மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு மாளிகையின் முன்பும் பி.ம்.டபிள்யு கார்கள் உள்ளன.
1998 ஆம் ஆண்டில் பங்கு சந்தையில் இறங்கிய ஹுவாக்ஸி, இன்று உலகம் முழுவதும் 40க்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு இக்கிராமத்தின் பொருட்களை எற்றுமதி செய்கிறது
பணச்செழுமை சுற்றுலா என்ற பெயரில் ஹுவாக்ஸிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு ஆண்டிற்கு 2 இலட்சம். இதன்முலமும் இக்கிராமத்திற்கு பணம் கொட்டுகிறது. " லோங்ஸி " என்ற 2000 பேர் ஒரே நேரத்தில் தங்க வசதியுள்ள சர்வதேச தரத்திலான ஹோட்டலும் இங்கு உள்ளது.
இவர்களின் வளர்ச்சிக்கு காரணங்கள்
# பாரம்பரிய விவசாயத்தில் நவீனத்தை புகுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
# அதில் பெற்ற அதிகப்படியான வருவாயை ஜவுளி, உருக்கு தொழிலில் முதலீடு செய்தனர்.
# கடுமையான உழைப்பு அதுவும் ஒற்றுமையுடன் செயல்பட்டது.




No comments:
Post a Comment